4ஜி எல்டிஇ பிளேபுக் டேப்லட்டினை அடுத்த வாரம் கனாடாவில் அறிமுகம் செய்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். வெகு
மாதங்களுக்கு முன்பே பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் பற்றிய பேச்சு அடிபட்டு கொண்டே இருந்தது.
ஆனால் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்குவதன் காரணமாக 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அறிமுகமாவது தாமதமாகி வந்தது. ஆனால் இந்த டேப்லட்டினை பிளாக்பெர்ரி நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது என்று இந்த டேப்லட்டின் தயாரிப்பாளர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கும் முன்பு 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்ற செய்தியை தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது இந்த டேப்லட் அடுத்த வாரம் அறிமுகம் ஆகும் என்பது முதல் கொண்டு, எந்தெந்த நாடுகளில் அறிமுகமாகும் என்பது வரை தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த டேப்லட்டில் உள்ள 4ஜி எல்டிஇ தொழில் நுட்பம், அதி வேகத்தில் தகவல்களை டவுன்லோட் செய்ய உதவும். பிளாக்பெர்ரியின் இந்த புதிய டேப்லட் 32 ஜிகாபைட்ஸ் மெமரி வசதியுடன் களமிறங்கும்.
4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் அறிமகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பெர்ரியின் மின்னணு சாதனங்களுக்கு நமது நாட்டிலும் சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் இந்த 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் நமது நாட்டிற்கும் வருகை தரும் என்று கருதப்படுகிறது.