Pages

Loading...

LIKE

Sunday, August 25, 2013

விண்டோஸ் 8 அப்டேட்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.


விண்டோஸ் 8 மூன்று விதமான விலைகளில் கிடைக்கிறது. நீங்கள் 2 June 2012 இருந்து 31 January 2013 இடைப்பட்ட நாட்களில் விண்டோஸ் 7 கணினி வாங்கி இருந்தால் கணினியை ரூபாய். 699 செலுத்தி குறைந்த விலையில் விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்து கொள்ளலாம். இடைப்பட்ட நாட்களில் கணினி வாங்க வில்லை எனில் ஆன்லைனில் விண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய ரூபாய் 1,999 செலுத்த வேண்டும். அல்லது DVD யாக பெற விரும்பினால் $69.95 செலுத்தி விண்டோஸ் 8 மென்பொருளை பெற்று கொள்ளலாம்.

அப்டேட் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
  • உங்கள் கணினியை விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு மாற்றி விட்டால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை உபயோகிக்க முடியாது. உபயோகிக்க எண்ணினால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை எதுவும் அழியாது. ஆனால் மற்ற விண்டோஸ் வெர்சன்களில்(XP, Vista) இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
  • அப்டேட் செய்வதற்கு முன் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் வசதிகள் உள்ளனவா என இந்த லிங்கில் System Requirements to install Windows 8 சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

அப்டேட் செய்வது எப்படி:
  • விண்டோஸ் 8 மென்பொருளை வாங்குவதற்கு முன் இந்த லிங்கில் சென்று Windows Upgrade Assistant என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணியில் இயக்கவும். .
  • இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஆராய்ந்து உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு அப்டேட் செய்ய ஏற்றதா இல்லையா என கண்டறிந்து சில தீர்வுகளை வழங்கும். 
  • ஒருவேளை உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தால் விண்டோஸ் 8 மென்பொருளின் டவுன்லோட் லிங்கும் காண்பிக்கும் அல்லது இந்த லிங்கில் Windows 8 Pro சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இலவசமான சிறப்பான அன்ரொயிட் மென்பொருள்கள்

செல்லினம்


உங்கள் அன்ரொயிட் மென்பொருளில் தமிழில் தட்டச்சிடுவதற்கு செல்லினத்தை விட வேறு மென்பொருள் ஏதும் தேவையில்லை. உங்கள் குறுஞ்செய்திகள் தொடக்கம் வேஸ்புக்கில் ஏதாவது தமிழில் எழுதவேண்டும் என்றாலும் செல்லினம் ஒன்றே போதும்.

sellinam

Viber


இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை எடுக்கவும், குறுஞ்செய்திகளை அனுப்பவும் பயன்படும் மென்பொருள் இது. (அனேகமான இயங்குதளங்களுக்கு கிடைக்கும் மென்பொருள் இது.)

viber

Flipboard


உலகச் செய்திகளை ஒரே இடத்தில் படிக்க அழகான வடிவமைப்புடன் உடைய மென்பொருள் இது.

flipboard

CamScanner


உங்களிடம் ஒரு ஒளிவருடி இல்லையா? கவலையை விடுங்கள். இந்த மென்பொருள் உங்கள் கைப்பேசியை ஒரு சிறந்த ஒளிவருடியாக மாற்றிவிடும்.

camScanner

Google Earth


இது நீங்கள் முன்னரே கேள்விப்பட் ஒன்றாகத்தான இருக்கும். இந்த பூமியை உங்கள் கைப்பேசியிலிருந்தே சுற்றிப் பார்த்திடலாம் இந்த மென்பொருளை பயன்படுத்தி.

google-earth



Wednesday, June 5, 2013

ANDROID சாதனங்களுக்காக புதிய வசதிகளுடன் அறிமுகமாகியது Gmail அப்பிளிக்கேஷன்

அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களுக்காக புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட Gmail அப்பிளிக்கேஷனை வெளியிட்டது கூகுள் நிறுவனம்.
இப்புதிய பதிப்பில் புதிய இன்பாக்ஸ் வடிவமைப்பை அறிமுகப்படுத்திய கூகுள் இணைய இணைப்பு அற்ற நேரங்களிலும் விரைவாக மின்னஞ்சல்களை தேடிக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இது தவிர மேலும் சில மாற்றங்கள் உட்பட முன்னைய பதிப்பில் காணப்பட்ட வழுக்கள் சரிசெய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை Google Play தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி

FixWin - கணினி பிரச்னைகளை சரி செய்ய உதவும் மென்பொருள்

நண்பர்கள் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் எக்ஸ்பி என அனைத்து இயங்குதளங்ளையும் பயன்படுத்தியிருப்பீர்கள்..! இவற்றில் இணைய இணைப்பு பெற்றிருக்கும் கணினிகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் (Virus, Malware, Spyware).

கணினியில் ஏற்படும் பொதுவான சில பிரச்னைகள்:
1. Windows Explorer
2. Internet Connection Problem
3. Media Player
4. Explorer.exe Problem
5. Recycle Bin,
6. Disk Drive Problem
7. Auto Run Problem


கூடவே சில செட்டிங்ஸ்(Settings Problems) பிரச்னைகளும் வரும். இதுபோன்று 50 வகையான பிரச்னைகளை மற்றவர்கள் துணையின்றி நாமே சரி செய்ய முடியும்.

ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆம் நண்பர்களே.. இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய பயன்படுகிறது இச்சிறிய மென்பொருள். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.. சிறிய சிறிய பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் மற்றவர்களைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் செய்கிறது இம்மென்பொருள்...


இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7