Pages

Loading...

LIKE

Friday, October 26, 2012

Android Application-களை தாக்கும் புத்தம் புதிய வைரஸ்


கூகுளின் Android Application Store-ஐ புதிய வைரஸ் ஒன்று தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த புதிய வைரசுக்கு Trojan Back Look out என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது Android சாதனங்களில் உள்ள SMS, MMS, Video Files மற்றும் ST Card-களில் உள்ள கோப்புகளை திருடி Remote FD Server-க்கு அனுப்பி விடும்.

மேலும் Android சாதனங்களில் உள்ள ரகசிய செய்திகளை மிக எளிதாக கண்டுபிடித்து விடும்.

ட்ரஸ்ட்கோ என்ற மென்பொருளுக்கான பாதுகாப்பை வழங்கும் நிறுவனம் இந்த வைரைசை கண்டுபிடித்திருக்கிறது.

அவ்வாறு இந்த புதிய வைரஸ் Android சாதனங்களைத் தாக்கினால் அந்த வைரஸை நீக்க ட்ரஸ்ட்கோ வழங்கும் Look out என்ற Anti-virus Applicationகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Saturday, October 20, 2012

Microsoft Security Essentials – ஆன்டிவைரஸ் மென்பொருள்.


விண்டோஸ் கணினிகளை பாதுகாக்க ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்களும் இருக்கின்றன.

ஆனால் அவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்தே கிடைக்கின்ற இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்திப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்ற அருமையான தொகுப்பாக உள்ளது.

ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் போன்று இதுவும் சிறப்பாக இயங்குவதாக கூறப்படுகின்றது.

சிறப்பம்சங்கள்.

  • இலகுவான வடிவமைப்பு,
  • ரியல் டைம் பாதுகாப்பு,
  • கணினியின் வேகத்தை பாதிக்காது,
  • குறைந்தளவு இடத்தை பிடித்தல்.


கணிணி பற்றிய தெரியாத தகவல்கள்


RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேன் 
புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.

Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது. இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.

DES - Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64-பிட அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.

Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

MMC - Multimedia Card: பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும்.
Thursday, October 18, 2012

முதன் முறையாக டேட்டா சென்டர்களின் படங்களை வெளியிட்டது கூகுள்


இணைய உலகில் தனக்கென தனியிடத்தினை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் முதன் முறையாக அதன் டேட்டா சென்டர்களிள் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜீ மெயில் என அனைத்து விடயங்களிலிருந்து பெறப்படும் டேட்டாக்கள் மேலும் அது தொடர்பான செயற்பாடுகள் எல்லாம் இங்கேயே இடம்பெறுகின்றது.

இவ்வாறு பெறுமிமிக்க இந்த இடத்திற்கு வெகு சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்அந்நிறுவனத்தின்ஊழியர்களேஅனுமதிக்கப்படுவதில்லை.

பயனர்களின் தரவுகள் மீதான பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டே இந்த சென்டர்களில் மட்டுப்படுத்தப்பட்ட சிலரே அனுமதிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது.

கூகுளின் முக்கியமான ' டேட்டா சென்டர்கள்' அமைந்துள்ள 8 இடங்களாவன

Berkeley County, S.C.
Council Bluffs, Iowa
Douglas County, Ga.
Mayes County, Okla.
Lenoir, N.C.
The Dalles, Ore.
Hamina, Finland
St. Ghislain, Belgium.

இவை தவிர தற்போது சிலி, சிங்கப்பூர், ஹொங்கொங், தாய்வான் ஆகிய நாடுகளிலும்  கூகுள் நிறுவனம் டேட்டா சென்டர்களை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கூகுளினால் வெளியிடப்பட்டுள்ள கண்கவரும் வகையிலமைந்து டேட்டா சென்டர்களின் படங்கள் இங்கே...




















பூமிக்கு பின்புறமாக புதிய கோள் கண்டுபிடிப்பு!



விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த கோள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமிக்கு பின்புறமாக அமைந்துள்ளது. பூமியைப் போன்ற அளவிலேயே இந்த புதிய கோளும் உள்ளது. புதிய கோள் அதன் சூரியனுக்கு வெகு அருகில் இருக்கிறது. இதன் சுற்றுப்புற வெப்ப நிலை 1,200 டிகிரி செல்சியஸ் (2 ஆயிரத்து 192 டிகிரி பாரன்ஹீட்) ஆகும்.

புதிய கோள் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களை ஜெனீவாவில் ஸ்டீபன் உத்ரி, சேவியர் டமஸ்கியூ ஆகிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஸ்டீபன் உத்ரி கூறுகையில், பூமியின் பின்னால் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

இது நமது பக்கத்து வீடு போன்று, வெகு அருகில் அமைந்திருப்பது சிறப்பானது என தெரிவித்தார். இதே போன்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி கிரேக் லாப்லினும் கருத்து தெரிவித்தார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

காத்தான்குடி கடலில் ஏற்பட்ட மாற்றமும் 2012 உலக அழிவும் ஒரு கண்ணோட்டம்,


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்) 

காத்தான்குடி கடற்கரையில் அதிகளவான மீன்கள் ,இராட்சத ஆமை இறந்த நிலையில் கரையொதுங்கியவண்ணம் உள்ளன.இதனோடு சிறிய பாம்பு போன்ற வகையான மீன் இனங்களும் சிறிய மீன்களும் இறந்த நிலையில்கரையொதுங்கியுள்ளன.




நேற்றைய தினம் இப்பகுதியில் அதிகளவான சாளை இன மீன்கள் உயிருடன் கரையோதிங்கியமை குறிப்பிடத்தக்கது. 

அடிக்கடி வரும் பூகம்பம், வராது வந்த சுனாமி, குளோபல் வார்மிங் எனச் சொல்லப்படும் புவி வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் உலக மக்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த ஒரு செய்தி நம்மை மிரள வைக்கிறது. அதாவது 2012, டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது

2000ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என இப்படித்தான் புரளியைக் கிளப்பினார்கள், இப்பவுமா? என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் அப்படித்தான் நினைத்தேன் அந்தச் செய்தியைப் படித்த பொழுது, ஆனால் அவர்கள் கொடுக்கும் ஆராய்ச்சி ஆதாரங்களை கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு பார்த்தால் அது உண்மை தானோ என எண்ணத் தோன்றுகிறது அதாவது எந்தவொரு ஆற்றலுமே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மையுடையது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதைத்தான் சின்ன வயதில் நாம் படித்திருக்கிறோம், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற இயலும். ஆனால் ஆற்றலை அழிக்க முடியாது என. அதைத்தான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இயற்கை பேராற்றல்களின் ஒன்றான பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி (அதிகாந்த மையம்) தன்னைத்தானே தனது துருவங்களை மாற்றிக் கொள்ள இருக்கிறதாம் அந்த சமயத்தில் சூரியனும், அதனைச் சுற்றியுள்ள கோள்களும் பிரபஞ்ச மையத்தின் கரு வளையத்திற்குள் சென்று மறைந்து விடுமாம். மீண்டும் புதிய கோள்கள், விண்மீன்கள் தோன்றி புதுப்பொலிவுடன் உயிர்கள் உருவாகும் என அச்செய்திகள் கூறுகின்றன. இது நிகழவிருக்கும் 4 நாட்களுக்கு முன்பே சூரியன் மறைந்துவிடுமாம்.இது 21.12.2012 அன்று நடைபெறும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது கட்டுகதை போல் தோன்றினாலும் நமது மனித வளர்ச்சியின் அடுத்த கட்டமான விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பல நாடுகளில் இருந்து ஏவப்பட்ட லட்சக்கணக்கான வின்வெளி ஓடங்கள் மற்றும் செயற்க்கை கோள்கள் எல்லாம் சுற்றி கொண்டிருக்கும் வட்டத்தில் உள்ள இயற்கை சக்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிகின்றது. எனவே பிரபஞ்சத்தின் மையமாக நாம் கருதும் அந்த கரு வளையம் தன் சக்தியை அதிகப்படுத்தினாலோ அல்லது சக்தியை குறைத்து கொண்டாலோ அதன் சுற்று வட்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் தங்கள் ஈர்ப்பு சக்தியை இழந்து கரு வளையத்துக்குள் இழுத்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.


ஆனால், மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளோ “பூமி மொத்தமாக அழியாது. தற்போது அடிக்கடி வரும் சுனாமி, பூகம்பத்தைப் போல இன்னும் பெரிய அளவில் வந்து புவியின் அடுக்குகளில் அதாவது பிளேட் என்று சொல்லப்படும் புவி கட்டமைப்பு நகர்ந்து நிலப்பரப்புகள் மாறும், அப்போது இப்போதுள்ள பல உயிரினங்கள் அழிந்து புது உயிரினங்கள் தோன்றும். சூரியன் இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு தொடர்ந்து அதன் செயலைச் செய்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் கடலாக இருந்த பகுதிதான் இன்று இமயமலை. இது போன்ற மாற்றங்கள் தான் நிகழும். ஒரு காலத்தில் இப்பூமியில் வாழ்ந்த டைனோசரும் இந்த மாதிரியான புவி மாறுதலால் தான் அழிந்து போனது” என்கின்றனர். இப்படி இரு மாதிரியான கருத்துகள் நிலவினாலும் ஒரு விஷயம் மட்டும் உறுதியாக தெரிகிறது. அதாவது 2012, டிசம்பர் 21 அன்று ஒன்று உலகம் அழியும்; அல்லது உலகம் மாறும் என்பது.


இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை படி காலம் நெருங்கி விட்டது என்ற வாக்குகள் அதிகம் உபயோகிப்படுகிறது. விவிலியத்தில் சுட்டிகாட்டப்பட்ட நிகழ்வுகள் நடக்கிறதோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம். சுனாமி குறித்தும் இன்னும் பல பேரழிவுகள் குறித்தும் சில உண்மைகள் மறைந்திருப்பதாகவே அவர்கள் நம்புகிறார்கள் அப்படி அவை உண்மையாக இருக்குமே ஆனால் உலகம் என்பது அப்படியே இருக்கும் ஆனால் மனித இனமும் பிற உயிர்களும் அழிந்து புதிய பல உயிர்கள் உருவாகலாம். எப்படி இருந்தாலும் இந்த அழிவு என்பது மட்டும் அழியாமல் சுற்றி கொண்டிருக்கிறது. அப்படி உலகம் அழியாமல் உயிர்கள் அழிந்து புதிய உயிர்கள் தோன்றுவதாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிற அறிவியலின் வார்த்தை உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம்தான் காரணம் நம் மனித வாழ்க்கை என்பது சிதைந்து விட்டது என்றே தோன்றகூடிய அளவில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. உணவை எடுத்து கொண்டால் இயற்கை உணவுகள் என்பது போய் எல்லாமே செயற்கையான உணவைத்தான் உண்டு மகிழ்கிறோம். மனிதர்களுக்கான பல குணாதியங்கள் மாறி வேறு ஒரு ஜந்துவாக மாறி கொண்டிருக்கும் மனிதர்களை நாம் தினமும் படித்தும் கண்டும் கொண்டுதான் இருக்கின்றோம். மனிதம் செத்துவிட்டது என்பது இன்று பொதுவான வாக்காக மாறி இருக்கும் சூழ்நிலையில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் சில பகுதிகளில் மனிதர்கள் மனித வாழ்க்கை வாழ முடியாத சூழ்நிலையில் இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

எது எப்படியோ உலகம் அழியும் என்பது பற்றி மேலும் சந்தேகம் இருந்தாலோ, என் மேல் சந்தேகம் இருந்தாலோ நீங்கள் End of the World Dec 21-2012 என்ற வார்த்தையைக் கொண்டு இணையத் தளத்தில் தேடி பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இது பற்றி படங்களோடு விளக்கம் அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதை நிரூபிக்கும் வகையில் புவியும் அடிக்கடி ஆட்டம் போடுகிறது. கடலும் கரையையும் கடந்து வருகிறது. என்னதான் நடக்கும்… பொறுத்திருந்து பார்ப்போம்!!
 c                                                                                                     Authorized by NIFRAS



Saturday, August 4, 2012

அடுத்த வாரம் டேப்லட் சந்தையை கலக்கும் பிளாக்பெர்ரி


RIM to Launch New 4G LTE PlayBook Next Week4ஜி எல்டிஇ பிளேபுக் டேப்லட்டினை அடுத்த வாரம் கனாடாவில் அறிமுகம் செய்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். வெகு

மாதங்களுக்கு முன்பே பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் பற்றிய பேச்சு அடிபட்டு கொண்டே இருந்தது.
ஆனால் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்குவதன் காரணமாக 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அறிமுகமாவது தாமதமாகி வந்தது. ஆனால் இந்த டேப்லட்டினை பிளாக்பெர்ரி நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது என்று இந்த டேப்லட்டின் தயாரிப்பாளர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கும் முன்பு 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்ற செய்தியை தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது இந்த டேப்லட் அடுத்த வாரம் அறிமுகம் ஆகும் என்பது முதல் கொண்டு, எந்தெந்த நாடுகளில் அறிமுகமாகும் என்பது வரை தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த டேப்லட்டில் உள்ள 4ஜி எல்டிஇ தொழில் நுட்பம், அதி வேகத்தில் தகவல்களை டவுன்லோட் செய்ய உதவும். பிளாக்பெர்ரியின் இந்த புதிய டேப்லட் 32 ஜிகாபைட்ஸ் மெமரி வசதியுடன் களமிறங்கும்.
4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் அறிமகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பெர்ரியின் மின்னணு சாதனங்களுக்கு நமது நாட்டிலும் சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் இந்த 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் நமது நாட்டிற்கும் வருகை தரும் என்று கருதப்படுகிறது.
Sunday, July 8, 2012

இன்று 9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற

இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.
DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.
இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.
இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.
உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய:
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்குwww.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.
 
இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:
DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.
ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.
மேக்(Mac) கணினிகளுக்கு:
மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.