Pages

Loading...

LIKE

Wednesday, June 5, 2013

FixWin - கணினி பிரச்னைகளை சரி செய்ய உதவும் மென்பொருள்

நண்பர்கள் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் எக்ஸ்பி என அனைத்து இயங்குதளங்ளையும் பயன்படுத்தியிருப்பீர்கள்..! இவற்றில் இணைய இணைப்பு பெற்றிருக்கும் கணினிகள் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் (Virus, Malware, Spyware).

கணினியில் ஏற்படும் பொதுவான சில பிரச்னைகள்:
1. Windows Explorer
2. Internet Connection Problem
3. Media Player
4. Explorer.exe Problem
5. Recycle Bin,
6. Disk Drive Problem
7. Auto Run Problem


கூடவே சில செட்டிங்ஸ்(Settings Problems) பிரச்னைகளும் வரும். இதுபோன்று 50 வகையான பிரச்னைகளை மற்றவர்கள் துணையின்றி நாமே சரி செய்ய முடியும்.

ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆம் நண்பர்களே.. இதுபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய பயன்படுகிறது இச்சிறிய மென்பொருள். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.. சிறிய சிறிய பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் மற்றவர்களைத் தேட வேண்டிய அவசியமில்லாமல் செய்கிறது இம்மென்பொருள்...


இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7
Saturday, November 17, 2012

கணினியில் அழித்த பைல்களை மீண்டும் பெற முடியுமா?



பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அழித்த பைல்களை எளிதாக மீட்டுப் பெற்று விடலாம் என்று அனைவரும் எண்ணுகிறோம். ஒரு சிலர், அனைத்தையும் பெற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துக் கொள்வதாய் இல்லை. இது குறித்து நிலவும் சந்தேகங்களையும், அவை சரியானவை தானா என்பதனையும் இங்கு காணலாம். 

1. அழித்த பைல் அனைத்தையும் ரீசைக்கிள் பின் கொள்ளும்:

விண்டோஸ் இயக்கத்தில், ரீசைக்கிள் பின் என்னும் மீட்புத் தொட்டி, நமக்கு உதவிடும் நண்பனாக இருக்கிறது. நாம் அழித்த பைல்களைத் தாங்கிக் கொண்டு, மீண்டும் அவற்றை மீட்டு எடுக்க உதவுகிறது. அழித்த பைல் எல்லாம் இதில் சென்று தங்குமா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் கூற இயலாது. அனைத்து பைல் வகைகளையும் ரீ சைக்கிள் பின் கொள்ளாது. நீங்கள் மிகப் பெரிய பைல் அல்லது போல்டரை அழிக்க முற்படுகையில், இதனை ரீ சைக்கிள் பின் கொள்ளாது என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும். மிகப் பெரிய பைல் என்றால், நிச்சயம் அது அழிக்கப்பட்டால், ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது. அதே போல, கமாண்ட் லைனிலிருந்து அழிக்கப்படும் பைல்கள் ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் அழிக்கப்படும் பைல்களும் இங்கு செல்லாது. 

2. அப்ளிகேஷன்கள் பைல்களை அழிக்கும் முன் கேட்காது:

அப்ளிகேஷன் புரோகிராம்கள் அப்டேட் செய்கையில், பழைய பைல்களை மேம்படுத்திக் கொள்ளும். இவற்றை மேம்படுத்துவதனால், பழைய பைல் அழிக்கப்படுகிறது, அழிக்கவா? என்றெல்லாம் நம்மிடம் ஆப்ஷன் கேட்காது. இவ்வாறு அழிக்கப்படும் பைல்களுக்கும் ரீ சைக்கிள் பின் அடைக்கலம் கொடுக்காது.

3. பேக் அப் செயல்முறை அழிக்கும் பழைய பைல்கள்:

அவ்வப்போது நம் பைல்களை பேக் அப் எடுப்பது ஒரு நல்ல பழக்கம். போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ், பிளாஷ் ட்ரைவ், சிடிக்கள் மற்றும் மேக்னடிக் டேப் ஆகியவற்றில் பேக் அப் எடுக்கலாம். இவ்வாறு எடுக்கையில், பழைய பைல்களின் இடத்தில், அப்டேட் செய்யப்பட்ட பைல்கள் இடம் பிடிக்கின்றன. பழைய பைல்கள் எங்கே செல்கின்றன? முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன. நாம் விரும்பினாலும் அவை மீளக் கிடைக்காது. ரீ சைக்கிள் பின் இந்த வகையில் நமக்கு உதவாது.

4. ஆபீஸ் பைல்கள் மேம்படுத்தப்பட்டால், பழைய பார்மட்டில் மீண்டும் கிடைக்காது:

மைக்ரோசாப்ட் வழங்கும் ஆபீஸ் தொகுப்பு மிக அருமையான வசதிகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். இது அடிக்கடி மேம்படுத்தப்பட்டு நமக்குக் கிடைத்து வருகிறது. இதனால், பழைய பதிப்புகளில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்கள், புதிய பதிப்புகளில் படிக்கப்படுகையில், புதிய பார்மட்டிற்கு மாற்றப்படும். எடுத்துக் காட்டாக, ஒருவர் ஆபீஸ் 2007 தொகுப்பில், டாகுமெண்ட் ஒன்றை தயாரித்து தன் நண்பர் ஒருவருக்குக் கொடுக்கிறார். அவர் அதனைத் தன் கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2010 தொகுப்பில் படிக்கிறார். டாகுமெண்ட் அந்த பார்மட்டுக்கு மாறுகிறது. டாகுமெண்ட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி, நண்பருக்கே திருப்பி அனுப்புகிறார். அவரால், அதனை தன் ஆபீஸ் 2007 தொகுப்பில் படிக்க இயலாது. அவரிடம், அவரின் பழைய பார்மட் டாகுமெண்ட் இல்லை என்றால், அவர் டாகுமெண்ட் பைல், அழிந்ததுதான். மீண்டும் கிடைக்காது. பார்மட்டினை ஆபீஸ் 2010 மாற்றுகையில், பழைய பார்மட் கொண்ட டாகுமெண்ட் பைல், ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

5. டேட்டா ரெகவரி புரோகிராம் உதவுமா?

அழிக்கப்பட்ட பைல்களில் உள்ள டேட்டாவினை மீட்டுத் தரும் பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவை எந்த அளவிற்கு அழித்த பைல்களை மீட்டுத் தரும்? எந்த சூழ்நிலையில் இவை இயங்கி மீட்டுத் தரும்? என்பது கேள்விக் குறியே. பெரும்பாலான நேரங்களில், இவை முழு வெற்றியைத் தருவதில்லை. முழுமையாக மீட்டுத் தருவதில்லை. 

6. பைல் அழிந்தால் அவ்வளவுதான்!:

ஒரு பைல் அழிக்கப்பட்டால், அவற்றில் உள்ள டேட்டா, அங்கேயே தங்குகிறது. முதல்  நிலையில் எது அழிக்கப்படுகிறது என்றால், அந்த டேட்டா தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல் தான். அந்த இடத்தில் இனி புதிய டேட்டாவினை எழுதிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் படுகிறது. எனவே, அந்த இடத்தில் புதிய டேட்டா எழுதப்படும் வரையில், டேட்டா தங்கும். அந்நிலையில் அவற்றை மீட்கலாம். ஆனால், அந்த டேட்டா தங்கும் பிரிவுகள் ஏதேனும் சிலவற்றில் கூட புதிய டேட்டா எழுதப்பட்டால், பழைய பைல் நமக்குக் கோர்வையாகக் கிடைக்குமா என்பது சந்தேகமே. இது போன்ற அமைப்பும் நமக்கு தீங்கு விளைவிக்கலாம். ஏனென்றால், அழிக்கப்பட்ட டேட்டாவினை, நமக்கு வேண்டாதவர் கைப்பற்ற முடியும். டேட்டா அடுத்தவர் அறியக் கூடாத வகை எனில், நமக்குத் தொல்லை தான். மேலே சுட்டிக் காட்டப்பட்டவை சில நிகழ்வுகளே. ரீ சைக்கிள் பின் மற்றும் பேக் அப் போன்ற வசதிகள் எந்த அளவிற்கு நமக்கு பைல்களை மீட்க உதவுகின்றன என்று பார்த்தோம். இப்போது சில அப்ளிகேஷன் புரோகிராம்கள், பைல்கள் எந்த சூழ்நிலையில் எப்போது அழிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மீட்டுத் தரும் என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இவற்றின் செயல் தன்மையைக் கண்ட பின்பே, இவை கூறும் சாத்தியக் கூறுகள் சரிதானா என்று அறியலாம்.
Thursday, November 15, 2012

Wifi இல் சில சுவாரசியம்


WiFi என்ற Wireless Fidelity இப்பொழுது பிரபலம்.802.11a,802.11b,802.11h எனப் பல வரையறைகள் இத்தொழில் நுட்பப் பயன்பாட்டில் வெளியாகியுள்ளன.802.11gஐ அடிப்படையாகக் கொண்ட வயர்லெஸ் நெட்வொர்க் கார்டுகளும்,அக்சஸ் பாயிண்டுகளும்(Access Point) கட்டுப்படியாகிற விலைகளில் கிடைப்பதால் எல்லோரும் வயர்லெஸ் நெட்வொர்க் பயன்படுத்த முனைகின்றனர்.
WIRELESS நெட்வொர்க்கில் பாதுகாப்பு அம்சம் கவனிக்கப்பட வேண்டியது.அதன் பாதுகாப்பு சரியில்லையெனில்,வேண்டாத நபர்கள் அதனுள் நுழைந்து,நாசத்தை ஏற்படுத்த முடியும்.உங்கள் நெட்வொர்க்கை பயனபடுத்தி மற்றொரு நெட்வொர்க்கை தாக்க முடியும்.

வயர்லெஸ் நெட்வொர்க்குகளை ஏற்படுத்துபவர்கள் அவற்றின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.அதற்கான சில ஆலோசனைகள் கீழே தரப்பட்டுள்ளன.

ஆன்டனாவை சரியான இடத்தில வையுங்கள்.உங்களுடைய நெட்வொர்க்கிற்கு வெளியே சிக்னல் செல்லக் கூடாது என்பதை மனதில்   வையுங்கள்.நெட்வொர்க்கிற்கு வெளியே செல்லுகிற சிக்னலை வேண்டாத நபர்கள் கைப்பற்றினால் ஆபத்து நேரிடும் என்பதை மறவாதீர்கள்.


Wireless Encryption Protocol(WEP)என்ற என்கிரிப்ஷன் முறையை உங்கள் நெட்வொர்க்கில் செயல்படுத்துவது நல்லது.அக்சஸ் பாயிண்டுகளைத் தயாரிக்கிற நிறுவனங்கள் இந்த புரோடோகோலை செயல் இழக்கச் செய்வது வழக்கம்.எனவே அதைச் செயல்பட வையுங்கள்.எனவே உங்கள் நெட்வொர்க்கில் இருந்து வெளியேறுகிற டேட்டாவை ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அவ்வளவு எளிதாக படித்துவிட முடியாது.

அக்சஸ் பாயிண்டுகளில் Service Set Indentifier என்ற வசதி உண்டு.ஒரு அக்சஸ் பாயிண்டானது தனது எஸ்எஸ்ஐடி பெயரை அலைபரப்பு செய்வது வழக்கம்.எனவே அந்த பெயரை தெரிந்து கொண்ட ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அந்த அக்சஸ் பாயிண்டில் நுழைய முயற்சி செய்வார்கள்.எனவே அக்சஸ் பாயிண்டின் SSID broadcast வசதியைத் தடை செய்து விடுங்கள். 

Dynamic Host configuration Protocol G DHCP என்ற வசதியை செயல் இழக்கச் செய்து விடுங்கள்.எனவே ஹேக்கர்களும்,கிராக்கர்களும் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முயன்றால் அவர்கள் TCP/IP புரோடோகால்களுக்கு தேவையான IP முகவரி,சப்நெட் மாஸ்க்(Subnet Mask) போன்ற விவரங்களை கொடுக்க வேண்டியிருக்கும்.உங்கள் நெட்வொர்க் தொடர்பான இந்த விவரங்கள் அவர்களிடம் இல்லாததால் அவர்களால் உங்கள் நெட்வொர்க்கில் நுழைய முடியாது.TCP/IP என்றால் Transmission Control Protocol/Internet Protocol எனப் பொருள்.

Simple Network Management Protocol G SNMP என்ற செட்டிங்களை அக்சஸ் பாயிண்டில் செயல் இழக்கச் செய்யுங்கள்;அல்லது மாற்றி விடுங்கள்.இதை நீங்கள் செய்யாமல் விட்டால் உங்கள் நெட்வொர்க் பற்றிய விவரங்களை ஹேக்கர்களும்,கிராக்கர்களும் அறிந்துவிட முடியும்.

எந்தெந்த கம்ப்யூட்டர்கள் எல்லாம் அக்சஸ் பாயிண்டு வழியாக செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கிற வசதி சில அக்சஸ் பாயிண்டுகளில் உண்டு.உங்களுடைய அக்சஸ் பாயிண்டிலும் அந்த வசதி இருந்தால்,உங்கள் நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க் கார்டு முகவரிகளை அக்சஸ் பாயிண்டிடம் தெரிவித்து விடுங்கள்.இந்த முகவரிகளைத் தவிர மற்ற முகவரிகள் கொண்ட கம்ப்யூட்டர்களை அனுமதிக்காதே என அக்சஸ் பாயிண்டிடம் கூறினால் நெட்வொர்க்கின் பாதுகாப்பு கூடுமல்லவா?

Saturday, October 27, 2012

விண்டோஸ் 8 மென்பொருள் வெளியீடு : உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்படி?



மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விண்டோஸ் 8 மென்பொருளை வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். டேப்லெட், ஸ்மார்ட் போன் என்று கணினி மயமாகி கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இந்த விண்டோஸ் 8 மென்பொருளை கணினிகள் மட்டுமின்றி டேப்லெட் கணினிகளிலும் உபயோகிக்குமாறு அமைத்துள்ளது இதன் சிறப்பு. உலவிகளில் உபயோகிப்பதை போல விண்டோஸ் 8 கணினிகளில் Apps களை உபயோகிக்கலாம் மற்றும் தொடுதிரை(Touch Screen) வசதியும் உள்ளது.

விண்டோஸ் 8 மூன்று விதமான விலைகளில் கிடைக்கிறது. நீங்கள் 2 June 2012 இருந்து 31 January 2013 இடைப்பட்ட நாட்களில் விண்டோஸ் 7 கணினி வாங்கி இருந்தால் கணினியை ரூபாய். 699 செலுத்தி குறைந்த விலையில் விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்து கொள்ளலாம். இடைப்பட்ட நாட்களில் கணினி வாங்க வில்லை எனில் ஆன்லைனில் விண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய ரூபாய் 1,999 செலுத்த வேண்டும். அல்லது DVD யாக பெற விரும்பினால் $69.95 செலுத்தி விண்டோஸ் 8 மென்பொருளை பெற்று கொள்ளலாம்.

அப்டேட் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
உங்கள் கணினியை விண்டோஸ் 8 இயங்கு தளத்திற்கு மாற்றி விட்டால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை உபயோகிக்க முடியாது. உபயோகிக்க எண்ணினால் மறுபடியும் பழைய விண்டோஸ் வெர்சனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
விண்டோஸ் 7 கணினியில் இருந்து விண்டோஸ் 8 க்கு அப்டேட் செய்தால் உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவை எதுவும் அழியாது. ஆனால் மற்ற விண்டோஸ் வெர்சன்களில்(XP, Vista) இருந்து அப்டேட் செய்தால் உங்களின் பழைய பைல்கள் அப்படியே இருக்கும். ஆனால் மென்பொருட்களை மறுபடியும் இன்ஸ்டால் செய்தாக வேண்டும். 
அப்டேட் செய்வதற்கு முன் விண்டோஸ் 8 மென்பொருளை நிறுவ உங்கள் கணினியில் வசதிகள் உள்ளனவா என இந்த லிங்கில் System Requirements to install Windows 8 சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்.

அப்டேட் செய்வது எப்படி:

விண்டோஸ் 8 மென்பொருளை வாங்குவதற்கு முன் இந்த லிங்கில் சென்று Windows Upgrade Assistant என்ற மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணியில் இயக்கவும். .

இந்த மென்பொருள் உங்கள் கணினியை ஆராய்ந்து உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு அப்டேட் செய்ய ஏற்றதா இல்லையா என கண்டறிந்து சில தீர்வுகளை வழங்கும். 

ஒருவேளை உங்கள் கணினி விண்டோஸ் 8 மென்பொருளுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருந்தால் விண்டோஸ் 8 மென்பொருளின் டவுன்லோட் லிங்கும் காண்பிக்கும் அல்லது இந்த லிங்கில் Windows 8 Pro சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 

பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். 
Friday, October 26, 2012

TeamViewer - கண்டம் விட்டு கண்டம் பாயும் மென்பொருள்


நாம் கணணியை நீண்ட காலம் பயன்படுத்தி வந்தாலும் அதில் ஏற்படும் எல்லாப் பிழைகளையும் (வன்பொருள் அல்லது மென்பொருள் [Hardware/ Software] ரீதியான) நம்மால் சீர்செய்து கொள்ள முடிவதில்லை. இவ்வாறான வேளையிலேயே நாம் மற்றவரை நாடுவதுண்டு. அதிலும் சிலருக்கு பொதுவாக பெண்களுக்கு தமது நண்பர்களாயிருந்தால்  வீட்டில் அழைத்து அப் பிரச்சனையை சரிசெய்வது என்பது சற்று கடினமானதே. அதேவேளை தெரிந்த உறவினர் இருப்பினும் வேறு நாட்டில் வசித்தால் எப்படி அப் 

பிரச்சனையை தீர்ப்பது என்று கவலைப்படுவதுமுண்டு. ஆனால் இப்போது இணைய வசதி இல்லாதவர்களின் வீடே இல்லையெனலாம். அப்படியிருக்க நமக்கேன் இவ்வாறான கவலை..? இருக்கவே இருக்கின்றது டீம் வியுவர்(TeamViewer) எனும் மென்பொருள் (TeamViewer) மூலம் ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்திருக்கும் உலகின் எப்பகுதியிலுமுள்ள ஒரு கணினியை உங்களது கணினி மூலம் அணுகி அதனை இயக்கலாம்.


உங்கள் கணினியின் முகப்புத்திரையை(Desktop) மறுமுனையில் இருப்பவருக்கும் அதேபோல் அவரது கணினியின் முகப்புத்திரையை(Desktop) உங்கள் கணினிலும் தோன்றச் செய்யலாம்.. இதன் மூலம் நாம் அதிக கொள்ளளவு(Capacity) கொண்ட பைல்களையோ படங்களையோ அல்லது வேறு ஏதும் செய்முறை கோப்புக்களையோ (Presentations) தொலைவிலுள்ளவருக்குக் கணப்பொழுதில் காண்பிக்கவும் பரிமாறிக் கொள்ளவும் முடியும். தொலைவிலுள்ள நண்பரைக் கொண்டு உங்கள் கணினியில் ஏற்பட்டுள்ள வன்பொருள் மற்றும் மென்பொருள் சிக்கலை அவரிடத்திற்கு நேரில் செல்லாமல் உங்கள் வீட்டிலிருந்தபடியே சரி செய்தும் கொள்ளலாம். இந்த TeamViewer ஆனது இணையத்திலிருந்து பதிவிறக்கி(Download) நிறுவிக்(Install) கொண்டபின் இலகுவாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக அதிகளவு கஷ்டப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், இம் மென்பொருளை பயன்படுத்த இரண்டு முனைகளிலும் TeamViewer நிறுவி இணையத் தொடர்பில் இருக்க வேண்டும்.

Android Application-களை தாக்கும் புத்தம் புதிய வைரஸ்


கூகுளின் Android Application Store-ஐ புதிய வைரஸ் ஒன்று தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த புதிய வைரசுக்கு Trojan Back Look out என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது Android சாதனங்களில் உள்ள SMS, MMS, Video Files மற்றும் ST Card-களில் உள்ள கோப்புகளை திருடி Remote FD Server-க்கு அனுப்பி விடும்.

மேலும் Android சாதனங்களில் உள்ள ரகசிய செய்திகளை மிக எளிதாக கண்டுபிடித்து விடும்.

ட்ரஸ்ட்கோ என்ற மென்பொருளுக்கான பாதுகாப்பை வழங்கும் நிறுவனம் இந்த வைரைசை கண்டுபிடித்திருக்கிறது.

அவ்வாறு இந்த புதிய வைரஸ் Android சாதனங்களைத் தாக்கினால் அந்த வைரஸை நீக்க ட்ரஸ்ட்கோ வழங்கும் Look out என்ற Anti-virus Applicationகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Saturday, October 20, 2012

Microsoft Security Essentials – ஆன்டிவைரஸ் மென்பொருள்.


விண்டோஸ் கணினிகளை பாதுகாக்க ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்களும் இருக்கின்றன.

ஆனால் அவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்தே கிடைக்கின்ற இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளை பயன்படுத்திப் பார்க்க நினைக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்ற அருமையான தொகுப்பாக உள்ளது.

ஏராளமான ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் போன்று இதுவும் சிறப்பாக இயங்குவதாக கூறப்படுகின்றது.

சிறப்பம்சங்கள்.

  • இலகுவான வடிவமைப்பு,
  • ரியல் டைம் பாதுகாப்பு,
  • கணினியின் வேகத்தை பாதிக்காது,
  • குறைந்தளவு இடத்தை பிடித்தல்.


கணிணி பற்றிய தெரியாத தகவல்கள்


RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.
Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேன் 
புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.

Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது. இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது.

DES - Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64-பிட அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.

Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

MMC - Multimedia Card: பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் செய்யப்பட்டிருக்கும்.