Pages

Loading...

LIKE

Wednesday, April 25, 2012

5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவை வெளியிட்டது கூகுள் சிறப்பம்சங்களை அறிய

கூகுள் டிரைவ் சிறப்பம்சங்கள்:
ஒவ்வொருவரும் 5GB இலவச இட வசதியை பெறலாம்.
தற்பொழுது Windows,Mac, Android இயங்கு தளங்களில் இருந்து உபயோகிக்கலாம். iPad மற்றும் iPhone இயங்கு தளங்களுக்கு விரைவில் வர இருக்கிறது.
இதற்க்கு முன்னர் இருந்த கூகுள் டாக்ஸ் வசதி இப்பொழுது கூகுள் டிரைவில் இணைந்து விட்டது. ஆகவே ஆன்லைனில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கூகுள்டாக்ஸ் உபயோகிக்க முடியும்.
கூகுள் டிரைவ் தற்பொழுது போட்டோஷாப்(PSD) பைல்கள் உட்பட 30 க்கும் அதிகமான பைல்வகைகளை சப்போர்ட் செய்கிறது.
கூகுள் டிரைவில் சேமித்து உள்ள பைல்களை குறிப்பட்ட குறிச்சொல் கொடுத்தோ அல்லது பைல்வகையை கொடுத்தோ தேடும் வசதி உள்ளது.
கூகுள் டிரைவில் டீபால்டாக OCR தொழில்நுட்பம் இணைந்துள்ளதால் ஏதாவது ஒரு ஸ்கேன் பைலை அப்லோட் செய்தால் அதில் இருந்து எழுத்துக்களை மட்டும் தனியே பிரித்து எடுக்க முடியும்.
கூகுள் டிரைவில் உள்ள போட்டோக்களை நேரடியாக கூகுள் பிளசில் பகிரும் வசதியும் உள்ளது மற்றும் விரைவில் கூகுள் டிரைவ் பைல்களை நேரடியாக ஜிமெயிலில் அட்டாச் செய்யும் வசதியும் வர இருக்கிறது.
இது மட்டுமின்றி சில மூன்றாம் தரப்பு மென்பொருள்களின் உதவியுடன் fax அனுப்பும் வசதி, வீடியோக்களை எடிட் செய்யும் வசதிகளை விரைவில் தர இருக்கிறது.

0 comments: