சமூக வலையமைப்பின் முடிசூடா மன்னனாக திகழும் Facebook க்கு போட்டியாக SO.CL எனும் சமூக இணையத்தை அண்மையில் Microsoft ஆரம்பித்திருந்தது. இந் நிலையில் Facebook க்கு மேலும் நெருக்கடி நிலையை ஏற்படுத்த இன்னுமோர் பிரபல சமூகதளம் ஒன்றை வாங்கவுள்ளது Microsoft.
சமூக வலை தளமான Yammer (யாமர்) அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த சமூக வலைதளம் செயல்பட்டு வருகிறது.
தற்போது யாமர் சமூக தளத்தை 2,00,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன
Yammer ஐ 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க Microsoft நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால் விரைவில் Yammer, Microsoft வசம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yammer ஐ Microsoft நிறுவனம் சமூகவலைத்தளமாக மாத்திரமின்றி Wikipedia போன்ற தகவல் களஞ்சியமாகவும் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment