Pages

Loading...

LIKE

Saturday, August 4, 2012

அடுத்த வாரம் டேப்லட் சந்தையை கலக்கும் பிளாக்பெர்ரி


RIM to Launch New 4G LTE PlayBook Next Week4ஜி எல்டிஇ பிளேபுக் டேப்லட்டினை அடுத்த வாரம் கனாடாவில் அறிமுகம் செய்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். வெகு

மாதங்களுக்கு முன்பே பிளாக்பெர்ரி நிறுவனம் புதிய 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் பற்றிய பேச்சு அடிபட்டு கொண்டே இருந்தது.
ஆனால் சிறந்த தொழில் நுட்பங்களை வழங்குவதன் காரணமாக 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அறிமுகமாவது தாமதமாகி வந்தது. ஆனால் இந்த டேப்லட்டினை பிளாக்பெர்ரி நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது என்று இந்த டேப்லட்டின் தயாரிப்பாளர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கும் முன்பு 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்ற செய்தியை தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்போது இந்த டேப்லட் அடுத்த வாரம் அறிமுகம் ஆகும் என்பது முதல் கொண்டு, எந்தெந்த நாடுகளில் அறிமுகமாகும் என்பது வரை தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த டேப்லட்டில் உள்ள 4ஜி எல்டிஇ தொழில் நுட்பம், அதி வேகத்தில் தகவல்களை டவுன்லோட் செய்ய உதவும். பிளாக்பெர்ரியின் இந்த புதிய டேப்லட் 32 ஜிகாபைட்ஸ் மெமரி வசதியுடன் களமிறங்கும்.
4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் அறிமகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளாக்பெர்ரியின் மின்னணு சாதனங்களுக்கு நமது நாட்டிலும் சிறந்த வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் இந்த 4ஜி எல்டிஇ ப்ளேபுக் டேப்லட் நமது நாட்டிற்கும் வருகை தரும் என்று கருதப்படுகிறது.
Sunday, July 8, 2012

இன்று 9 ஜூலை 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற

இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.
DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.
இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.
இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.
உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய:
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்குwww.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.
 
இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:
DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.
ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.
மேக்(Mac) கணினிகளுக்கு:
மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.
Wednesday, June 20, 2012

லினக்ஸ் பயனர்களுக்கு Skype 4.0 புதிய வெர்சன் வெளியீடு


நீண்ட நாட்களுக்கு பிறகு லினக்ஸ் பயனாளிகளுக்கு ஸ்கைபின் புதிய வெர்சனனான Skype 4.0 வெளியிடப்பட்டுள்ளது. ஸ்கைப் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கிய பிறகு இனி லினக்ஸ் பயனாளிகள் ஸ்கைப் மென்பொருளை உபயோகிக்க முடியாது என்றும் இந்த சேவையை விரைவில் நிறுத்தி விடும் என்றே பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கலாம் அதற்கேற்ற மாதிரி வெகுநாட்களாக எந்த புதிய வெர்சனும் வெளியிடப்படாமல் இருந்தது
.

இந்த நிலையில் லினக்ஸ் பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் Skype 4.0 என்ற புதிய வெர்சனை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். மற்றும் இந்த புதிய வெர்சனில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள்:
·         New Conversations View
·         New Call View 
·         Better call quality 
·         Improved Video call quality 
·         Improved chat synchronization 
·         New presence and emoticon icons 
·         Store and view phone numbers in a Skype contacts profile.
இந்த புதிய வெர்சனை உபயோகிக்க 1GHz processor, 256MB RAM, and 100MB இருந்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Skype 4.0 for Linux


Tuesday, June 19, 2012

ப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை



புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.
 ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது. 
(http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ப்ளேம் வைரஸ், கம்ப்யூட்டரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.

பாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது.

கம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது.

எனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.

இந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது.

அப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது

Friday, June 15, 2012

facebook க்கு Microsoft வைக்கும் இன்னுமோர் செக்!




சமூக வலையமைப்பின் முடிசூடா மன்னனாக திகழும் Facebook க்கு போட்டியாக SO.CL எனும் சமூக இணையத்தை அண்மையில் Microsoft ஆரம்பித்திருந்தது. இந் நிலையில் Facebook க்கு மேலும் நெருக்கடி நிலையை ஏற்படுத்த இன்னுமோர் பிரபல சமூகதளம் ஒன்றை வாங்கவுள்ளது Microsoft.
சமூக வலை தளமான Yammer (யாமர்) அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்த சமூக வலைதளம் செயல்பட்டு வருகிறது.
தற்போது யாமர் சமூக தளத்தை 2,00,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன
Yammer ஐ 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க Microsoft நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால் விரைவில் Yammer, Microsoft வசம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yammer ஐ Microsoft நிறுவனம் சமூகவலைத்தளமாக மாத்திரமின்றி Wikipedia போன்ற தகவல் களஞ்சியமாகவும் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sunday, May 6, 2012

பென்டிரைவில் பாதுகாப்பான Safely Remove வசதி!!


யு.எஸ்.பி டிரைவ்களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safely Remove கொடுக்காமல் மறந்து விடுகிறோம்.இதனால் பென்டிரைவ் போன்ற யு.எஸ்.பி டிரைவ்கள் பழுதடைய வாய்ப்பு அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே நேரம் பென்டிரைவிற்கு எந்தவித பிரச்னையும் வராமல் தடுக்கலாம்.

இதற்கு :
1. முதலில் உங்கள் பென்டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை 
உங்கள் கணணியில் செருகவும்.

2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும்.

3. இப்போது உங்கள் கணணியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். அதன் மீது Double Click செய்யவும்.

4. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் “Quick removal (default)” என்பதை தெரிவு செய்யவும்.

அவ்வளவு தான், இனிமேல் நீங்கள் Safely Remove என்பதை கொடுக்க தேவையில்லை.

Friday, April 27, 2012

How To add Facbook Messenger

Facebook Messenger is a new app that brings Facebook to your desktop. While you surf the web or use other application on your computer, you can chat and message with your friends on Facebook, see the latest updates from your friends in tricker,Get quick notification about what's going on.

Messenger lets you use Facebook without being on facebook.com. You will now be able to stay in touch anytime, no matter what you're doing. You can set up the app if you use Windows 7 on your computer. By default, the this app is undocked. So you can easily move it around your computer screen (just click the top of the sidebar and drag it with your mouse). When it's unlocked you can also close the sidebar by clicking the 'X" and still get notifications and chats. When you dock the window, it stays on the right side of your screen.

First log in your Facbook account.
Click on "install".


when finish download, open the setup and wait. Facebook Messenger" setup file to your computer. Facbook Messenger will automatically install to your computer with in sec
Wednesday, April 25, 2012

USB ட்ரைவ் Corrupt ஆனால்….

இவை நாம் பயன்படுத்தும் பலவகையான வீடியோ கோப்பு உட்பட கோப்புகளை சேவ் செய்து மீண்டும் பெற்றுப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இந்த வேலையில் இவை எந்த பிரச்னையையும் தருவதில்லை.யு.எஸ்.பி பிளாஷ் ட்ரைவ்கள் அனைத்தும் plug and play வகையைச் சேர்ந்த சாதனங்கள்.ஆனால் கணணியில் உள்ள இதனை இணைக்கும் யு.எஸ்.பி. போர்ட்டிலிருந்து சரியாக இதனை நீக்கவில்லை என்றால் பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக கணணி அதனைத் தேடி செயல்பாட்டில் வைத்திருக்கையில், கணணியில் இருந்து நீக்கினால் நிச்சயம் பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.
சில வேளைகளில் அதில் உள்ள அனைத்து தகவல்களையும் மீண்டும் பெற்று பயன்படுத்த முடியாமல் போய்விடும். அல்லது குறிப்பிட்ட கோப்பு கரப்ட் ஆகும் அல்லது பிளாஷ் ட்ரைவே பயன்படுத்த முடியாமல் போய்விடலாம்.
பெரும்பாலும் இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கும் பிளாஷ் ட்ரைவ்களை அவற்றை மீண்டும் போர்மட் செய்வதன் மூலம் தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். ஆனால் இந்த வழியை மேற்கொண்டால் உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள அனைத்து கோப்புகளும் அழிக்கப்படும்.

இந்த வேலையை மேற்கொள்ளும் முன்னர் உங்கள் கணணியில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் செயல்பாட்டில் சிக்கல் இருக்கிறதா எனக் கண்காணிக்கவும்இதற்கு கணணியில் உள்ள அனைத்து யு.எஸ்.பி போர்ட்களையும் அன் இன்ஸ்டால் மற்றும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இதனை விண்டோஸ் டிவைஸ் மேனேஜர் மூலம் மேற்கொள்ளலாம்.

யு.எஸ்.பி ட்ரைவை எடுத்துவிடவும். பின்னர் கணணியில் உள்ள ஸ்டார்ட் மெனு சென்று, அதன் சர்ச் பாக்ஸில் “Device Manager” என டைப் செய்திடவும் அல்லது கண்ட்ரோல் பேனல் என டைப் செய்து கிடைக்கும் பிரிவில் டிவைஸ் மேனேஜரைப் பெறவும். இதற்கு கண்ட்ரோல் பேனல் பிரிவில் Hardware and Sound என்பதில் கிளிக் செய்திடவும்.

இங்கு கிடைக்கும் “Device Manager” என்ற லிங்க்கில் மீண்டும் கிளிக் செய்திடவும். உங்களுடைய யு.எஸ்.பி.போர்ட்களைக் கண்டறிய “Universal Serial Bus” என்று இருப்பதை மவுஸ் கிளிக் மூலம் விரிக்கவும். இதில் கிடைக்கும் பல வரிகளில், முதலாவதாக உள்ளதைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் “Uninstall” என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இப்படியே மற்ற யு.எஸ்.பி. சார்ந்த வரிகளிலும் இச்செயலை மேற்கொள்ளவும். இப்போது கணணியில் உள்ள அனைத்து யு.எஸ்.பி.போர்ட்களும் அன் இன்ஸ்டால் ஆகி இருக்கும்.

இவை அனைத்தையும் மீண்டும் தானாக ரீ இன்ஸ்டால் ஆக மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர டிவைஸ் மேனேஜர் மேலாக உள்ள, Scan For Hardware Changes என்ற பெயரில் உள்ள புளூ கலர் ஐகானில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை ஏதேனும் ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் இணைத்துச் செயல்படுத்திப் பார்க்கவும்.

இன்னும் தொடர்ந்து உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்படவில்லை என்றால், ட்ரைவினை போர்மட் செய்வதுதான் அடுத்த வழி. ஸ்டார்ட் மெனுவில் “Computer” என்ற பட்டனை அழுத்தவும். “Devices With Removable Storage” என்ற தலைப்பின் கீழாக, உங்கள் ட்ரைவின் பெயரைத் தேடிக் கண்டறியவும்.

இதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Format” என்பதைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தவும். போர்மட் செய்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து “Eject” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து வெளியேறவும்.

“Format Options” என்ற பிரிவில் என்ற “Quick Format” பாக்ஸின் முன் டிக் அடையாளம் இருந்தால் அதனை எடுத்து விடவும். இந்த வகை போர்மட்டில், யு.எஸ்.பி. ட்ரைவ் மிக வேகமாக போர்மட் செய்யப்பட்டாலும், கரப்ட் ஆன ட்ரைவினை இந்த வகையில் சீராக போர்மட் செய்திட முடியுமா என்பது சந்தேகமே. வழக்கமான முறையில் ட்ரைவினை போர்மட் செய்த பின்னர், ட்ரைவினை போர்ட்டிலிருந்து எடுத்து விடவும்.

விண்டோஸ் 7 சிஸ்டம், பாதுகாப்பாக ட்ரைவினை போர்ட்டிலிருந்து நீக்க வசதியைக் கொண்டுள்ளது.இதன் மூலம் ட்ரைவில் பதிந்துள்ள தகவல் அழிக்கப்படுவதும், ட்ரைவ் கரப்ட் ஆவதும் தடுக்கப்படுகிறது.

இதற்கு ட்ரைவ் போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கையில், டாஸ்க் பாரில் உள்ள “Safely Remove Hardware and Eject Media” என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். இந்த ஐகான் டாஸ்க் பாரில் வலது கீழாக இருக்கும்.

இதில் தரப்பட்டுள்ள “Eject” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்தால், கணணிக்கும் ட்ரைவிற்கும் உள்ள இணைப்பு நிறுத்தப்படும். தகவல் பரிமாறிக் கொள்ளும் செயல் நடைபெறாது. இதனை உறுதிப்படுத்திக் கொண்டு, பொறுமையாக ட்ரைவினை நீக்கவும்.